இன்று தாவர இனங்களில் பூச்சிக் கொல்லி மருந்தைத் தூவி பூச்சிகளைக் கொன்று அதிலே விளைந்தவைகளைத் தான் உணவாக நாம் இன்று உட்கொள்கின்றோம்.
நாம் தூவிய நஞ்சை ஏற்றுக் கொண்டு அந்தப் பூச்சிகள் இறந்தாலும் நஞ்சுகள் புழுவின் உடலில் விளைந்து மிகவும் நஞ்சு கொண்ட கிருமிகளாகப் புழுக்களாக விளைகின்றது.
நாம் பாய்ச்சிய அந்த பூச்சிக் கொல்லி மருந்து தாவர இனத்திலும் கலந்து அதுவும் நஞ்சாக மாறி அதையே நாம் உணவாக உட்கொள்ளும் போது நமக்குள் நஞ்சின் உணர்வுகள் அதிகமாகச் சேர்ந்துவிடுகின்றது.
இதனால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னி (சிறுநீரகங்கள்) செயலற்றதாகி நல்ல அணுக்களைக் கொன்று (பூச்சிகளைக் கொன்றது போல்) பல நோய்களை உருவாக்கும் நிலைகளாக உருவாக்கி விடுகின்றது.
இப்படி விஞ்ஞான அறிவால் காற்று மண்டலம் முழுவதுமே இன்று நச்சுத் தன்மையாக மாறிவிட்டது. இந்த நச்சுத் தன்மையான காற்றை நாம் சுவாசிக்கும் பொழுது அது மீண்டும் நம் இரத்தங்களில் கலந்து நம் உறுப்புகளைப் பாழாக்கும் நிலை ஆகிவிடுகின்றது.
ஆனால் நமது சிறுநீரகங்களின் வேலை என்ன...?
நாம் சுவாசித்த நிலைகளையும் ஆகாரத்தின் வழி கொண்டு வந்த இந்த விஷத் தன்மைகளை நமது சிறுநீரகங்கள் பிரித்து நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. அதில் வரும் கசடுகளை நீராக மாற்றுகின்றது.
ஆனால் விஷத்தின் தன்மை அதிகமாகும் பொழுது சிறுநீரகம் செயலிழந்து உடல் முழுவதும் விஷத்தன்மை பரவுகின்றது. அசுத்த இரத்தம் மற்ற உறுப்புகளுக்குள் செல்லும்போது நம் உடலிலுள்ள ஏனைய உறுப்புகளும் பாழாகிவிடுகின்றது.
விஷமான இரத்தம்
1.நமது இருதயத்திற்குச் சென்றால் அங்கே உறையும் தன்மை வருகின்றது.
2.நுரையீரலில் சேர்த்தால் அது வந்து சளித் தன்மை உருவாகின்றது.
3.குடல் பாகத்திற்குள் சென்றால் சளியின் தன்மை உருவாக்கி உள்வாதம் என்ற நிலைகள் உருவாகின்றது.
இதைப்போன்ற நிலைகளெல்லாம் இருந்து உங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் வழியினைச் சொல்கின்றோம்.
அந்த மகா ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால் விஞ்ஞான அறிவால் நம்மை அறியாமல் நமக்குள் சேர்ந்த நஞ்சைப் பிளக்க முடியும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகம் முழுவதும் படர்ந்து சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி அந்த அரும்பெரும் சக்தியைச் உங்கள் சிறுநீரகத்தில் பாய்ச்சுங்கள்.
சிறுநீரகத்தை உருவாக்கிய அந்த அணுக்கள் அனைத்தும் நஞ்சைப் பிரித்து நல் உணர்வாக மாற்றும் திறன் கொண்ட வலிமையான சிறுநீரகங்களாக மாற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள். இப்போது
1.உங்கள் சிறுநீரகங்களுக்குள் புதுப் புது உணர்ச்சிகள் தோன்றும்.
2.விஷத்தை பிரிக்கும் ஆற்றல் பெறும்.
3,சிறுநீரகத்தை உருவாக்கிய அந்த அணுக்கள் உற்சாகம் அடையும்.
4.உங்கள் இரத்தம் தூய்மை அடைகின்றது.
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது சர்க்கரைச் சத்து உப்புச் சத்து விஷத் தன்மை போன்ற நிலைகளை அது நீக்கிவிடும்.
குப்பையில் பல கழிவுகள் இருப்பினும் அதன் சத்தினை மாற்றி செடி கொடி மரங்கள் நல்ல சக்திகளக மாற்றிக் கொள்வது போல நமக்குள் பல முநதைய தீமைகள் இருப்பினும் இதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது விஷத் தன்மைகளைப் பிரித்துவிடும்.
1.ஒளியின் சுடராக மாற்றிட முடியும்.
2.இனி வரும் எத்தகைய தீமைகளையும் ஒளியின் நிலையாக மாற்றும் அருள் சக்தியும் பெறுகின்றோம்.
No comments:
Post a Comment