நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாறி வாயிலே அதற்குத் தகுந்த அமிலமாக (உமிழ் நீராக) மாறுகின்றது.
அந்த உமிழ் நீர் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது. அந்த உணர்வுக்கொப்ப தான் (உமிழ் நீர்) தான் ஜீரணிப்பதும் ஜீரணமற்ற நிலை உருவாவதும்.
சலிப்பும் சஞ்சலமுமாக இருக்கும் பொழுது நல்ல சுவையான உணவை நீங்கள் உட்கொண்டால் ஜீரண சக்தியே குறைகின்றது.
கஷ்டப்பட்டு உழைத்து வரும் நிலையில் உடல் வலு பெற வேண்டும் என்று எண்ணி நல்ல உணவைச் சாப்பிட்டாலும்
1.சலிப்பு சஞ்சலம் என்ற உமிழ் நீர் கலந்து
2.சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமாகி
3.ஜீரணிக்கும் சக்தியை இழந்து வயிறு உப்புசமாகி
4.வாயுவின் தன்மை நுரையீரல்களில் அதிகமாகி மூச்சுத் திணறல் போன்று வரும்.
5.நமக்கு ஆயாசமாக வரும்.
ஆனால் நாம் தவறு செய்தோமா...? என்றால் இல்லை. சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கப்படாதபடி தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும்...?
எங்கள் சிறுகுடலை உருவாக்கிய அணுக்களும் பெருங்குடலை உருவாக்கிய அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை குடலுக்குள் செலுத்துங்கள்.
1.அந்த ஜீரண உறுப்புகள் பலவீனமடையாதபடி உற்சாகப்படுத்தி
2.சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்கும் ஆற்றல்கள் பெற வேண்டும்
3.ஆகாரத்தில் உள்ள சத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இப்போது அந்தச் சிறுகுடலிலும் பெருங்குடலிலும் ஒரு விதமான புத்துணர்ச்சிகள் உருவாகும்.
1.சிறு குடலில் புண் இருந்தாலும்
2.ஜீரணிக்கும் சக்தி குறைந்திருந்தாலும்
3.இயக்கச் சக்தி குறைந்து இருந்தாலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அணுக்களுக்கு ஊட்டப்படும் போது
4.வீரிய உணர்வு பெற்று நல்ல இயக்க சக்தியாக மாறும்.
நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் உள்ள நல்ல சத்தினை நமக்குள் வடித்து நஞ்சினைத் தணித்து நல்ல அணுக்களையும் நல்ல இரத்தங்களையும் உருவாக்கும் சக்தி பெறச் செய்யும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் சிறுகுடல் பெருகுடலை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை ஏக்க உணர்வுடன் பாய்ச்சுங்கள்.
1.உங்கள் குடல் பாகங்களில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் இப்பொழுது நீங்கும்.
2.அருள் உணர்வுகளை உங்கள் உடலில் பெருக்கும்.
No comments:
Post a Comment