நம் வாழ்க்கையில் சம்பந்தம் இல்லாமலேயே சில நிகழ்ச்சிகள் நடக்கின்றது.
உதாரணமாக பாச உணர்வு உள்ளவர்கள் நாம் பஸ்ஸிலே செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அதே சமயம் எதிர்பாராதபடி ஒரு மனிதன் குறுக்கே ஓடுகின்றான் என்பதைப் பார்க்கின்றோம்.
அவன் மேல் அடிபட்டு விடுமே என்ற பயத்தில் ஓங்கி… “ஆ..ஆ..!” அடிபட்டுவிடுவாரே…!” என்ற ஏக்கத்தில் ஏங்கினால் போதும். ஆனால் அவன் தப்பி விடுவான்.
அதே சமயம் நம் எண்ணத்தில் அந்த ஏக்கத்தின் “உச்சக்கட்டம்” அடையப்படும் போது
1.நாம் எடுக்கக்கூடிய அந்தப் பய உணர்வாலே
2.இதே போல… “அடிபட்டு இறந்த அந்த ஆத்மாக்கள்” நம் உடலுக்குள் வந்து விடும்.
அப்படி வந்துவிட்டால் அது எந்தெந்த எண்ணங்கள் கொண்டு செயல்பட்டதோ “அந்த உடலில் கடைசி நிமிடத்தில் செய்து கொண்ட இந்த உணர்வுகளை எல்லாம்” நம் உடலில் வந்து இயக்கத் தொடங்கிவிடும்.
எந்தப் பயத்துடன் இருந்தேனோ அதே எண்ணத்தில் பயத்துடன் இருக்கும் போதெல்லாம் அந்த உயிராத்மா எனக்கு ஒத்துழைக்கும்.
ஆனால் அதே சமயம் நான் நல்லதை எண்ணும் போது அந்த ஆன்மா அதே பய உணர்வை ஊட்டி நம் நல்ல காரியங்களைச் செய்வதை தடைப்படுத்தும்.
காரணம் எந்தப் பயத்தால் கடைசி நிலைகளில் அது உயிரை விட்டதோ அந்த உயிராத்மா “அதே நிலைகளில் இருந்து தான்” நமக்குள் இருந்து செயல்படும்.
நாம் நல்லதை நினைக்கும் போதெல்லாம் அது அதற்கு எதிர்நிலை. அப்பொழுது அந்த உணர்வு வேதனையான நிலைகளை அது எடுத்துக் கொண்டிருந்தால் அந்தப் பய உணர்வின் தன்மையை…
1.நல்ல எண்ணங்களுடன் நம்முடைய நினைவைச் செலுத்தி அதைச் சுவாசிக்கப்படும்போது
2.நம்மை அறியாமலேயே பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்.
(நெஞ்சுப் பகுதியில் நம்மை அறியாமல் துடிப்புகள் ஏற்படும்)
இதைப் போன்ற நிலைகளை நாம் பேய்… என்கிறோம்; அருள்… என்கிறோம். இப்படிப் பல ஆத்மாக்கள் நமக்குள் வந்து இயங்கி விடுகின்றது.
1.அதை நம்முடன் இணைந்து அந்தச் சக்தி பெறச் செய்வதற்கு
2.நம் உடலுக்குள் இருக்கும் போதும்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.
நமக்காக வேண்டித் தியானத்தின் மூலமாக நமக்கு எடுக்ககூடிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் இருக்கக்கூடிய அந்த ஜீவாத்மாக்களும் பெற வேண்டும் என்று இந்த உணர்வின் நினைவை நாம் செலுத்த வேண்டும்.
அப்படிச் செலுத்தப்படும் போது அந்த உயிராத்மாவும் “நமக்குள் அடங்கி” நல்ல சக்திகள் பெறும்போது நம் எண்ணத்தை ஓங்கிச் செயல்படுத்த இது உதவும்.
ஆகையினாலே அந்த ஆத்மாக்களும் நம் உடலில் இருக்கும் போதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த நினைவைச் செலுத்தும் போது அதற்கும் ஒரு புண்ணியம் கிடைக்கின்றது.
கடைசியில் (நாம் இறக்கும் பொழுது) நம் உடலை விட்டு இந்த உயிராத்மா பிரிந்தாலும் அது தனித்து வெளியிலே சென்று வேறு ஒரு நல்ல ஆத்மாவிலே மனித உடலைப் பெறக்கூடிய தகுதியாக அது பெறும்.
ஆகையினாலே இதைப் போன்று நாம் இந்த ஆத்ம சுத்தி செய்வதனால்
1.நமக்குள் நம்மை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும்
2.அந்த ஆத்மாக்களின் இயக்கங்களிலிருந்து பரிபூரணமாக நாம் விடுபடுகின்றோம்.
3.நம் நல்ல எண்ணங்களுக்கு அவைகள் தடையாக இருப்பதில்லை
4.அதே சமயத்தில் நம் உடலில் இருக்கக்கூடிய அந்த ஆத்மாக்களும் நல்ல நிலை பெறுகின்றது.
No comments:
Post a Comment