சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு வள்ளி திருமணம் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்,
வள்ளி திணைக் காட்டிலே காவல் காத்துக் கொண்டு இருக்கின்றாள். தான் விளைய வைத்த பொருளை மற்றது கொத்தித் தின்று விடாதபடித் தன் பாதுகாப்பிற்காக வேண்டி அங்கே காவல் புரிகின்றாள்.
வெகு தூரத்தில் இருந்து வருவதைத் தன் பாதுகாப்புக்காக வேண்டி கவண் கொண்டு வீசுகின்றது. அவள் யார்...? வேடுவனின் மகள்.
பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி அதிலே விளைந்த சக்தி தான் மனித உடலில் இருந்து வரக்கூடிய வலிமை மிக்க சக்தி “ஆறாவது அறிவு” வள்ளி.
பாதுகாக்கும் சக்தி – வலிமை – வல்லவன் – வல்லவி = “வள்ளி”
வல்லவன் “வல்லவி...” வள்ளி என்று பெண்பாலைக் காட்டி எதைத் தன்னுடன் இணைத்துச் செயல்பட வேண்டும் என்பதை “வள்ளி திருமணம்” என்ற காவியமாகப் படைத்துத் தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
1.அந்த வள்ளியை முருகன் காதலிக்கின்றான்.
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
3.இந்த வலிமை மிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.
ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகா… “முருகு….” முருகு என்றால் மாற்றி அமைக்கும் சக்தி.
தீமையை மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள் மனிதர்கள் என்றும் தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு வருகின்றது.
நம்மை ஏசுவோரையும் நமக்குத் தீமை செய்வோரையும் நாம் எண்ணிக் கொண்டிருந்தால் என்றால் அது நம்முடைய நல்ல உணர்வைத் தின்றுவிடும்.
வேதனைப்படுவதை ஒருவர் சொல்லி விட்டால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தின்றுவிடும்.
அதாவது வேதனை வேதனை என்று அதை நாம் நுகர்ந்தால் டி.பி. நோய் வருகின்றது. நம் நல்ல குணங்களை உடலை அது தின்று விடுகின்றது.
அதைத் தான் திணைக் காட்டில் குருவியை உட்கார விட்டோம் என்றால் அதில் விளைய வைத்ததைத் தின்று விட்டுப் போய்விடும். வள்ளி அவ்வாறு ஆகாதபடி அதைக் காவல் காக்கின்றாள் என்று காட்டினார்கள் ஞானிகள்.
1.நம்மைப் பாதுகாக்கும் உணர்வை நாம் நேசித்தால்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தால்
3.நம் உடலுக்குள் சென்றபின் “தெய்வ ஆணை…!”
4.இந்த உடலில் காத்திடும் செயலாக உயிர் இயக்குகின்றது.
உயிர் = தெய்வம்; இயக்கம் = ஆணை – “தெய்வ ஆணை”
ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த வலிமை மிக்க சக்தியை (வள்ளி) நேசித்தால் அது நம் உயிரிலே பட்டுத் தெய்வ ஆணையாக இயக்கும்.
1.தெய்வச் செயலாக நம்மைச் செய்ய வைக்கும்.
2.தெய்வீக நிலையைப் பெறச் செய்யும்.
3.அதைத் “திருமணம் செய்து கொள்...!” என்று தான் வள்ளி திருமணத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.
No comments:
Post a Comment