Friday, 21 February 2020

குருநாதர் சொன்ன அருளை நமக்குள் வளர்த்தால்…. “அது எவ்வளவு பெரிய வேலை செய்யும்…!” என்று தெரிந்து கொள்ளுங்கள்


சாமி செய்வார்… சாமி தான் (ஞானகுரு) எல்லாம் செய்வார்… என்று சொல்லிக் கொண்டு
1.சாமி சாப்பிட்டாலே போதும்…
2.நாங்கள் வளர்ந்து விடுவோம்…! என்று சொன்னால் நீங்கள் எப்படி வளர முடியும்…?

“எல்லாம் சாமி பார்த்துக் கொள்வார்…!” என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்து கொண்டு
1.உங்களுக்குச் சாப்பாடு எதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் நானே சாப்பிட்டேன் என்றால்..
2.சாமி சாப்பிட்டால் போதும்…! என்று நீங்கள் பட்டினியாக இருந்தால் என்ன ஆவது…?
3.யார் பார்ப்பார்கள்…?

நம்பிக்கை எப்படிப் போகின்றது…! தன்னை நம்பிக் கொள்வதில்லை. “சாமி தான்….,” என்று என்னைத்தான் நம்புகின்றனர்.

சாமி சொன்ன அந்த அருளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அது எவ்வளவு பெரிய வேலை செய்யும்…! என்று தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

1.ஒவ்வொருவருக்கும் இந்த உபதேசத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
2.உங்களுக்குள் அருள் சக்தி விளைகின்றது.

தவறு செய்பவரைப் பார்த்து அவன் ரொம்ப மோசமான ஆள் “மோசமானவன்…!” என்று பேசிக்கொண்டே இருந்தால்… என்ன விளையும்…?

வீட்டிற்கு வந்தால் சண்டை நிச்சயம் வரும். வியாபாரம் மந்தமாகும். அடுத்தவர்களைப் போடா என்று சொல்லி… வம்புக்கு இழுத்துக் கொண்டு இருப்பீர்கள்.

வருமா வராதா…? நீங்கள் எதைப் பேசுவீர்கள்…? குறைகளைத்தான் பேசுவீர்கள். ஆனால் அதை நீக்குவதற்கு உண்டான மார்க்கங்களை நீங்கள் பேசிப் பாருங்கள்.

குறை என்று தெரிகின்றது. இப்படி நடந்தது என்று பார்க்கின்றீர்கள். அப்பொழுது 
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்.
2.அவர்கள் எப்படியும் அந்த இருள்களிலிருந்து விடுபட வேண்டும் என்று
3.அதனுடன் இந்த அருள் ஒளியைச் சேர்க்கின்றீர்கள்.
4.அப்போது அந்தக் குறை நமக்குள் வளராது
5.அவர்களுக்குள்ளும் வளராது தடுக்கின்றீர்கள்.

ஆகவே தீமைகள் இந்த வழியில் தான் நம்மைப் பாதிக்கின்றது. அதை அருள் ஒளி கொண்டு மாற்ற வேண்டும் என்று மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

நீங்கள் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்தத் தீமை உங்களைத் தாக்காது பாதுகாத்துக் கொள்வது நாமாக இருக்கின்றோம்.

அதே சமயம் நான் தயங்குகின்றேன். ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவேர் ஒளியாகி விட்டார். நான் அவரை விட்டு விட்டு இருந்தேன் என்றால் என்னாகும்…?
1.அவர் காப்பாற்றுவார் என்று சொன்னால்…..! “அந்த எண்ணம்….”
2.அவர் காப்பாற்றுவார் என்ற நிலையை… “அதை எடுத்தால்…”
3.அந்த எண்ணம் (நம் எண்ணம்) நம்மைக் காப்பாற்றும்…!

என் (ஞானகுரு) பக்கத்திலிருந்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் எல்லாச் சக்தியும் கொடுத்தார் என்று எண்ணாதீர்கள் என்று தான் சொல்கிறேன்.
1.அவர் கொடுத்த ஞான வித்தை உங்களிடம் விதைக்கின்றேன்… வளர்க்கின்றேன்…!
2.நீங்கள் அதை வளர்க்க வேண்டும்.

கடையில் பலசரக்கு காய்கறி எல்லாம் இருக்கின்றது. அதை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து நம் வீட்டில் வைத்துச் சமைத்து சாப்பிட்டால் தான் நம் பசி அடங்கும். மற்றவர்களின் பசியையும் போக்க முடியும்…!

சமைக்காமல் அதைச் சாப்பிட முடியுமா…!

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் அருள் ஒளியை எடுத்து நமக்குள் சமைக்க வேண்டும்.
1.அந்த உயர்ந்த சக்தியை நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுக்க வேண்டும்.
2.அதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
3.நீங்கள் ஒவ்வொருவரும் நம் குருநாதரைப் போன்று மாற வேண்டும்.

No comments:

Post a Comment