Monday, 3 February 2020

நம்முடைய ராசிப் பிரகாரம் இன்றைக்கு இது ஆகாது… அது ஆகாது… என்று பார்க்கின்றோம்…! “ஆகாது…ஆகாது…” என்று சொல்வது தான் ராசிகளா…! அந்தப் பன்னிரெண்டு ராசிகள் என்பது எது…!


27  நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய விஷத் தன்மையை எடுக்கிறது. அவைகளைச் சூரியன் தனக்கு உணவாக எடுக்கப்படும் போது ஒன்றோடு ஒன்று மோதும். அப்பொழுது மின்னலாக மாறும். ஆவியாக மாறும்.

மின்னலாக மாறுவதை வெள்ளிக் கோள் அந்த உணர்வின் ஒளி அலைகளை எடுத்து கொள்ளும்.

ராகு கேது என்ன செய்கிறது…? அந்த விஷத்தையும் கருகும் நிலைகளைக் கவரக்கூடிய சக்தி பெற்றது. அதை எடுத்துக் கொள்கிறது.

 வியாழன் 27 உபகோள்களின் மூலம் 27 நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளைக் கவர்ந்து கொள்கின்றது.

செவ்வாய்க் கோள் – நாதகாரகன்… மோதலில் வரும் உணர்வின் ஒலி அலைகளை செவ்வாய் எடுத்து கொள்கிறது.

இதிலிருந்து பிரிந்து போகும் ஆவியின் தன்மையை சனிக் கொள் எடுத்துக் கொள்ளும்.

இதெல்லாம் விளைந்து வெளியில் வரக்கூடியதை ஒட்டு மொத்தமாகச் சேர்த்துச் சூரியன் அருகில் இருக்கக்கூடிய புதன் உலோகத் தன்மையாக மாற்றுகிறது.

உலோகத் தன்மையாக மாறும் போது சூரியன் பாதரசமாக மாறுகிறது. பாதரசமும் உலோகத் தன்மை கொண்டது. அது எதில் கலக்கிறதோ அதனின் உணர்வுக்குத் தக்க எடுத்துக் கொண்டு வருகின்றது.

அந்தப் பாதரசத்துடன் கலந்தால் மற்றதோடு இணைத்துப் பலவிதமான உலோகங்களாக மாற்றுகிறது.
1.ஒவ்வொரு தாவர இனத்திற்கும் உலோகத் தன்மை உண்டு.
2.உலோகத் தன்மை இல்லை என்றால் அந்தத் தாவரத்திற்குச் சத்தில்லை
3.தாவரத்தின் மணத்தை உயிரினங்கள் நுகரும் பொழுது எண்ணங்களாகின்றது.
4.தாவரத்தில் கலந்துள்ள உலோகத்தின் தன்மையை நாம் எதை அதிகமாக நுகர்கின்றோமோ
5.அதற்குத்தக்க உணர்வின் வலுத் தன்மை நமக்குக் கிடைக்கிறது
6.இதையெல்லாம் சாஸ்திர விதிகள் தெளிவாகக் கூறுகிறது.

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களைப் புரிந்து கொள்ளாதபடி 27 நட்சத்திரங்கள் ஒன்பது கோள்கள் எல்லாம் சேர்த்துப் பன்னிரெண்டு ராசிகள்  என்று
1.இவர்கள் உடலில் விளைய வைத்ததை நமக்குள் பதிவாக்கிக் கொண்டு
2.அவர்கள் எண்ணத்திற்குத் தான் நாம் போகிறோம்
3.ஞானிகள் சொன்ன எண்ணத்திற்குப் போகவில்லை.

ராசிகளைப் பற்றி ஜாதகப்படி என்ன சொல்கிறார்கள்..? குழந்தை பிறக்கிறது என்றால் அந்த நேரத்தைக் குறித்து வைத்துக் கொள்வார்கள். அந்த நேரத்தைக் குறித்து வைத்துக் கொண்டு அதற்கென்று ஒரு ஏடு (குறிப்பு) வைத்திருப்பார்கள்.

இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் இது இதெல்லாம் ஆகாது என்று குறிப்பில் இருக்கும். அதை எடுத்துப் படித்து வைத்துக் கொண்டு அதைத்தான் திருப்பிச் சொல்வார்கள். அதில் உண்மை இருக்காது.

குழந்தை இந்த நேரத்தில் பிறந்ததால் வீட்டில் பெரியவர்கள் ஒருத்தருக்கொருத்தர் சந்திக்கக் கூடாது…! குழந்தையின் அப்பா வீட்டிற்கு ஆகாது என்று சொல்லிவிடுவார்கள்.

அப்போது அந்தத் தாயும் சேயும் தன் தாய் வீட்டிற்குப் போய் விட வேண்டும்.

அதே போல குழந்தை பிறந்த நேரப்படி தாய் மாமன் பார்க்கக் கூடாது. பார்த்தால் தாய் மாமனுக்கு மோசம் ஆகிவிடும் என்று சொல்வார்கள்.

 இதைக் கேட்டவுடன் என்ன செய்கிறோம்…? இதைப் பதிவாக்குகிறோம். இந்தக் குழந்தையை பார்த்தால் எனக்கு ஆகாது என்று சொல்லி விட்டார்கள். அதனால் நான் பார்க்க மாட்டேன் என்று அந்தத் தாய் மாமன் சொல்லிவிடுவார்.
1.இப்படி ஒரு உணர்வின் பதிவைத் தான் நினைவாக்கி
2.சாஸ்திரமாக நமக்குள் உருவாக்கி விடுகின்றார்கள்
3.இதில் எந்த உண்மையும் இல்லை.

வேதனையை ஒரு மனிதன் தனக்குள் உருவாக்கினான் என்றால் நாம் பார்த்தது “அடப் பாவமே…! எப்படி இருந்தவன் இப்படி ஆகி விட்டானே…?” அன்று நாம் நினைக்கிறோம். அந்த வேதனை உணர்வுகள் நமக்குள்ளும் வந்து விடுகிறது.
1.அவன் இறந்த பிறகு அவன் உணர்வு நமக்குள் வந்து
2.பின் அவன் ஆன்மாவே நமக்குள் வந்து விடுகிறது
3.நாமும் அவன் இறந்த வழியிலேயே மடிய வேண்டியது தான்.

இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் நாம் வளர்ந்து வந்தாலும் எதனின் விஷத்தின் வலிமையோ அதன் வழியில் தான் நம் வாழ்க்கையும் மாறிக் கொண்டே வருகிறது. இதையெல்லாம் நாம் மாற்றி அமைத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்குத் தான் நம் குருநாதர் கொடுத்த அளவுகோலாக உங்களுக்குத் தீமையை நீக்கும் இந்தப் பயிற்சியைக் கொடுப்பது.

இதைப் பழகி விட்டால் அப்புறம் என்னாகும்…? தையல் கடையில் போய் முதலில் பழகும் போது கோணலாகத் தான் போகும். தைத்துப் பழகி விட்டால் பின் நேராகவும் சீராகவும் வந்துவிடும்.

பின்னலாடையில் பின்னப் போகும் போது அப்படியே பேசிக் கொண்டே சீராகப் பின்னுவார்கள். அதே போல நீங்கள் தீமைகளைச் சந்திக்கும் நேரத்தில் எல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுக்கும் பழக்கம் வந்து விட்டால்
2.எந்தத் தீமை வந்தாலும் உடனடியாக உங்களுக்குள் மாற்றிக் கொள்ளும் ஆற்றல் வந்துவிடும்.

அப்படி மாற்றும் சக்தியை குருநாதர் எமக்குக் கொடுத்த அதே வழிப்படி உங்களுக்கும் அந்தப் பயிற்சியைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

No comments:

Post a Comment