தசரதச் சக்கரவர்த்தி மூன்று சாம்ராஜ்யத்தையும் பிடிக்க வேண்டும் தானே ஆளவேண்டும் என்ற ஆசையில் அந்த உணர்வை நுகர்கின்றார். அந்த உணர்வின் தன்மை தான் வசிஷ்டர் – வசிஷ்டர் என்றால் கவர்ந்து கொண்ட உணர்வு என்பது.
அதாவது சாம்ராஜ்யத்தை எல்லாம் ஆள வேண்டும் என்ற ஆசையில் கவர்ந்த உணர்விற்குப் பெயர் வசிஸ்டர். அந்த உணர்வு அவர் உடலில் பிரம்ம குருவாக மாறி விடுகின்றது.
பிரம்ம குருவின் மனைவி யார்...? அருந்ததி. தீமைகளைச் செய்து மற்றவர்களை எப்படி அழித்துக் கொல்ல வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.
இந்த உணர்வு வந்தபின் தசரதர் என்ன செய்கின்றார்...? பிரம்ம குருவின் மனைவி அருந்ததி என்ற அந்தச் சக்தியை வைத்துத் திட்டமிட்டபடி போருக்குச் சென்று சண்டையிடுகின்றார்.
தசரதன் போரில் ஜெயித்து விடுகின்றான். ஜெயித்தவுடனே என்ன செய்கின்றான்...?
1.ஜெயித்ததற்கு உறுதுணையாக இருந்த தன் மனைவியிடம்
2.உனக்கு இரண்டு வரம் தருகின்றேன் “என்ன வேண்டும்...?” என்று கேட்கின்றான்.
“நான் சமயம் வரும் போது கேட்கின்றேன்...!” என்று கைகேயி சொல்கிறது.
ஏனென்றால் விதையைப் போட்ட உடனே பலனை எதிர்பார்க்க முடியுமா...! விதைத்தது வளர்ந்து முழுமையாக வளர்ச்சியான பின் தான் பலனைக் கொடுக்கின்றது.
நாம் காலையிலிருந்து இரவு வரை எதை எதை எண்ணி நமக்குள் சேர்க்கின்றோமோ எத்தனையோ நிலைகளைப் பார்க்கின்றோமோ அந்த உணர்வெல்லாம் நமக்குள் சேர்கின்றது.
தசரதன் என்றால்...
1.பத்தாவது நிலை அடையக்கூடிய உயிர்... அது
2.நாம் நினைத்த... கவர்ந்த... உணர்வெல்லாம் நம் உடலில் பிரம்ம குருவாகி
3.அருந்ததியாக இணைந்தே செயல்பட்டு
4.எந்தக் குணமோ அதன் வழி நமக்குள் இயக்கும்.
தசரதச் சக்கரவர்த்திக்கு எண்ணிலடங்காத மனைவிகள் என்று சொல்வார்கள். நம் உடலில் ஒவ்வொருவருக்கும் எத்தனை மனைவி இருக்கிறது...? அப்படி என்றால் பொருள் என்ன...?
அதாவது நாம் நுகர்ந்த குணங்கள் எல்லாம் நமக்குள் சக்தியாக இயக்குகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவிதமான குணத்தை எடுக்கின்றோம்.
நம் உடலுகக்குள் கோபம் இருக்கிறது சாந்தம் இருக்கிறது ஞானம் இருக்கிறது விவேகம் இருக்கிறது அடங்காப் பிடாரியும் இருக்கி்ன்றது எல்லாக் குணங்களும் நமக்குள்ளே இருக்கின்றது.
நமக்குக் கோபம் வந்து விட்டது என்றால் அதன் வழியில் அடுத்தவருக்குத் தொல்லை கொடுக்கின்றோம் அல்லவா...!
ஒவ்வொரு (மனித) உடலிலேயும் உடல் என்ற நிலை வரும் போது ஆண்பாலாகின்றது. உடலுக்குள் சக்திகள் இயக்கும் போது பெண்பாலாகின்றது.
1.பெண்களாக இருந்தாலும் அதே தான்
2.ஆண்களாக இருந்தாலும் அதே தான்...!
ஆனாலும் சக்திகள் (பிரம்மமாக்கப்படும்) அதிகமாக்கப்படும் போது அதன் வழியில் தன் இனத்தை உடலுக்குள் பெருக்கும் சக்தி வருகின்றது. ஆகையினால் தான் அதைக் கைகேயி என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
தசரதச் சக்கரவர்த்தி இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகின்றான்.
ஆனாலும் மூன்று நாட்டையும் ஆள வேண்டும் என்ற நிலையில் மற்றதை எல்லாம் அடித்துக் கொன்ற உணர்வுகள் அவன் உடலில் தான் அது இருக்கிறது.
ஒரு செடியில் விளைந்த வித்து அதன் நிலையைத்தான் அது வளர்க்கும். எந்த வித்தை விதைக்கின்றமோ அது தான் விளையும். அதே மாதிரித் தான்
1.மற்றவர்களைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வு மனைவியாக இருக்கிறது.
2.அப்போது தன் இனத்தை அது பெருக்க அந்த உணர்ச்சிகளை ஊட்டத்தானே செய்யும்.
அந்த உணர்வு வரப்போகும் போது இராமனுக்குப் பட்டம் சூட்டி விட்டால் “நாம் வேலைக்காரியாக ஆகிவிடுவோமே...!” என்கிற இந்த எண்ணம் வருகிறது.
அந்த எண்ணம் வந்தவுடனே பட்டம் சூட்டப் போகக்கூடிய இந்த நேரத்தில் இராமனை எப்படிக் காட்டிற்கு அனுப்ப வேண்டும்..? என்று கைகேயி சிந்திக்கின்றார்.
அப்போது அன்றைக்கு இரண்டு வரம் கொடுத்தீர்கள் அல்லவா...! அதை இன்றைக்குக் கொடுக்கின்றீர்களா...? என்று தசரதரைக் கேட்கின்றார்.
பரதன இராமனுடன் சேர்ந்து பழக்கப்பட்டவன். அவன் இருக்கும் போது இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டால் நமக்கு ஒப்புக்கொள்ள மாட்டான் என்று அவனைக் கைகேயின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகின்றார்.
இராமனைக் காட்டிற்கு அனுப்ப வேண்டும் சொன்னவுடனே நல்லவனை இந்த மாதிரிச் சொல்கிறார்களே என்று வேதனைப்படுகின்றான் தசரதன்.
1.நல்லவர்களை வேதனைபடச் செய்து வாங்கியது தானே அந்தச் சக்தி
2.அதே சக்தி இங்கே இருப்பதால் அது தான் வேலை செய்கிறது
3.ஆகவே நல்லவனை வாழ விடவில்லை.
உடலுக்குள் இருந்தாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.
1.நாம் கெட்ட குணங்களை எடுத்துக் கொண்டால்
2.நல்ல குணங்களை நம்மால் காப்பாற்ற முடியாது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
நாம் எடுக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் எப்படி இருக்கின்றது...? நம்மை எப்படி இயக்குகின்றது...? என்று இராமயாணத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.
தசரதன் அவன் கொடுத்த வாக்கின் பிரகாரம் அவ்வாறு செய்ய வேண்டி இருக்கின்றது.
1.வாக்கென்றால் அவன் போர் செய்யும் பொழுது பல கொடுமைகள் செய்து
2.எத்தனையோ பேரைக் கொன்று தானே போரிலே வெற்றி வாகை சூடினான்...!
3.வெற்றியினால் தான் உனக்கு என்ன வேண்டும்...? என்று வரமாக்க் கொட்டுக்கின்றான்
4.அதே உணர்வு தான் இங்கே இவன் உடலுக்குள் நல்லதைச் செயல்படுத்த முடியாது போகின்றது
5.அதனால் இவன் இறந்து விடுகின்றான்.
இறந்தவுடனே கைகேயி பரதனை அழைக்கின்றார். இங்கே வந்து பார்க்கும் பொழுது இராமனையும் காணோம்... அப்பாவையும் காணோம்.... ஒரே சோகமாக இருக்கின்றது...!
யாரும் ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஆகவே பரதன் தன் தாயாரிடம் வந்து கேட்கின்றான்.
அப்போது கைகேயி சொல்லும் போது நான் என்ன செய்யட்டும்...? அன்று போரில் ஜெயித்துக் கொடுத்ததற்கு இரண்டு வரம் கேள்... தருகிறேன்...! என்றார். சமயம் வரும் போது கேட்கிறேன்... என்றேன் நான்...!
அந்த வரத்தைத் தான் இப்போது கேட்டேன். என் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றேன்.
மூத்தவன் இருக்கும் போது உனக்குப் பட்டம் கட்ட முடியாது என்று தான் இராமனைக் காட்டிற்கு போகச் சொன்னேன். அவர் கொடுத்தபடி தான் நான் வரத்தைக் கேட்டேன். அவர் தான் இராமனைக் காட்டிற்கு அனுப்பினார் என்று கைகேயி பரதனிடம் சொல்கிறார்.
அப்போது பரதன் என்ன சொல்கிறான்.....?
1.அடி சண்டாளி...! உன் தாயார் வீட்டிலேயும் இதே தான் நடந்தது.
2.எங்கள் குடும்பத்திலேயும் நீ அதே மாதிரிச் செய்கிறாய்...
3.அன்றே கொன்று இருந்தால் இந்த சாம்ராஜ்யத்திற்கு ஒரு கேடும் வந்து இருக்காது அல்லவா...! என்கிறான்.
இதனுடைய விளக்கம் என்ன....?
ஒரு வேதனைப்படும் உணர்வோ பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற வேதனைப்படுத்தும் உணர்வையோ நாம் சந்தர்ப்பத்தில் நுகர்ந்தாலும்
1.அது நமக்குள் வராதபடி வளராதபடி அப்பொழுதே கொன்று
2.அதை நாம் செயலற்றதாக மாற்ற வேண்டும்.
அதாவது தீமைகளை எண்ணாது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதனின் இயக்கத்தைத் தடுத்துப் பழக வேண்டும். நிறுத்தி விட்டோம் என்றால் அந்தத் தீமை நம் உடலுக்குள் விளையாது.
தீயதைப் பார்த்துப் பதிவாக்கும் போது அந்தப் பதிவின் தன்மை மீண்டும் நமக்குள் விளையாதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அப்பொழுதே அந்த்த் தீமைகள் செயலற்றதாக மாற்றும்.
இதைத் தான் இராமயாணத்தில் இவ்வளவு பொருள்படும் படித் தெளிவாகக் கொடுக்கின்றார்கள். நாம் யாராவது சிந்திக்கின்றமா...?
ஆகவே நாம் ஒவ்வொரு நொடியிலேயும் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும். பருப்பை வேக வைத்தால் முளைக்காது. இது தான் விநாயகர் சதுர்த்தி.
1.நாம் எதைக் கண்ணால் பார்த்தோமோ
2.அடுத்த நொடி அதனுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் போது
3.அதை (தீமையை) அடக்கி அருள் உணர்வுகள் முன்னாடி வரும்.
கண் பார்வை ஒன்று தான். தீமையைப் பார்த்த்தும் அடுத்த கணம் அருள் உணர்வைக் கொண்டு வரும் போது அடுத்த வரிசையில் வருகின்றது. அடுத்த வரிசையில் வரும் போது (தீமையை நீக்கும் பதிவாக) பதிவாகி விடுகின்றது.
அதைத்தான் “அன்றே கொன்றிருந்தால்...” என்று பரதன் சொல்வதாக இராமயாணத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.
நம் வாழ்க்கையில் சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணமே அந்த்த் தீமை என்று தெரிந்தபின் “பிரேக் போட்ட மாதிரி...! நிறுத்த வேண்டும்...” (முக்கியமானது)
“ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.அது எங்கள் இரத்தத்தில் கலந்து ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.
நம்மைச் சுத்தப்படுத்தியபின் அடுத்து என்ன செய்ய வேண்டும்...?
நாங்கள் சந்திப்போர் அனைவரும்
1.அந்த மகரிஷிகள் அருள் சக்தி அவர்கள் உடலில் படர வேண்டும்.
2.அவர்கள் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் நல்லவராக ஆக வேண்டும்.
5.அவர்கள் குடும்பத்தில் உயர்ந்த நிலை பெற வேண்டும்.
6.அவர்கள் மலரைப் போல மணம் பெற வேண்டும் என்று
7.நீங்கள் இப்படி எத்தனை வேண்டும் என்றாலும் நல்லதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதுவெல்லாம் நாம் நம் அன்றாடை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அருள் நெறிகள்...!
No comments:
Post a Comment