வாழ்க்கையில் நாம் நல்லதையே எண்ணிக் கொண்டிருந்தாலும் பிறர் செய்யும் செயல்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் செயல்படும் பொழுது அந்தத் தீய உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
ஒரு வெள்ளைத் துணியை நாம் போட்டிருந்தாலும் அது அழுக்குகள் சேர்ந்துவிட்டால் அடுத்த நிமிடம் சோப்பைப் போட்டு வெளுத்து விடுகின்றோம்.
அதைப் போன்று தான் தீமையை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துத் தீமையை விளைவிக்கும் உணர்வைச் சுத்தப்படுத்தும் நிலையே யாம் உபதேசிக்கும் இந்த நிலைகள்.
ஏனென்றால் இன்று தாவர இனங்களில் பூச்சிக் கொல்லி மருந்தைத் தூவி பூச்சிகளைக் கொன்று அதிலே விளைந்தவைகளைத் தான் உணவாக நாம் உட்கொள்கின்றோம்.
1.நாம் தூவிய நஞ்சை ஏற்றுக் கொண்டு அந்தப் பூச்சிகள் இறந்தாலும்
2.நஞ்சுகள் புழுவின் உடலில் விளைந்து
3.மிகவும் நஞ்சு கொண்ட கிருமிகளாகப் புழுக்களாக விளைகின்றது.
4,பரிணாம வளர்ச்சி அடைகின்றது.
ஆனால் அதே சமயம் நாம் பாய்ச்சிய அந்த பூச்சிக் கொல்லி மருந்து தாவர இனத்திலும் கலந்து அதுவும் நஞ்சாக மாறி அதையே நாம் உணவாக உட்கொள்ளும் போது “நம் உடலுக்குள் பல நோய்களாக விளையத் தொடங்குகின்றது….!”
தாவர இனத்தில் விழுந்த பூச்சிகளையும் புழுக்களையும் மருந்தைத் தூவி இரக்கமற்றுக் கொன்றது போல நமக்குள் அந்த உணர்வின் தன்மை நஞ்சாக நமக்குள் சேர்ந்து விடுகின்றது.
நமக்குள் நஞ்சின் உணர்வுகள் அதிகமாக விளைந்து விட்டால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் நிலைகள் கிட்னி (சிறுநீரகங்கள்) செயலற்றதாகி நல்ல அணுக்களைக் கொன்று (பூச்சிகளைக் கொன்றது போல்) பல நோய்களை உருவாக்கும் நிலைகளாக உருவாக்கி விடுகின்றது.
1.எந்த நஞ்சினை வடிகட்டும் திறன் கொண்டதோ
2.”அந்தக் கிட்னி” தன் வடிகட்டும் திறனை இழந்து
3.அதனால் நஞ்சின் தன்மைகள் நம் உடலுக்குள் படர்ந்து
4.நம் சிந்திக்கும் திறனைச் செயலற்றதாக்கி
5.நஞ்சை வளர்த்திடும் உடலாக மாற்றிவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும்…?
விஞ்ஞானி அணுவைப் பிளந்து அணு குண்டைத் தயார் செய்கின்றான். மெய் ஞானிகளோ உணர்விற்குள் இருக்கும் நஞ்சைப் பிளந்து அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.
அந்த மகா ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால் விஞ்ஞான அறிவால் நம்மை அறியாமல் நமக்குள் சேர்ந்த நஞ்சைப் பிளக்க முடியும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் கிட்னி முழுவதும் படர்ந்து கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினைக் கிட்னிக்குள் பாய்ச்சிப் பழக வேண்டும்.
அந்த ஞானியின் உணர்வலைகள் நீங்கள் சுவாசித்து உங்களை அறியாது வந்த நோய்களையும் தீய வினைகளையும் நீக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு ஆண்டெனாவை (ANTENNA) விண்ணை நோக்கிச் வைக்கப்படும் போது விண்ணிலிருந்து வருவதைக் குவித்துக் கவர்ந்து டிவியில் தெளிவாக உணர்த்துகின்றது.
1.அந்தச் சக்தி வாய்ந்த ஆண்டெனாவைப் போல
2.இந்த உபதேசத்தைக் கூர்ந்து கவனித்த உணர்வின் அலைகள்
3.உங்கள் கண்ணின் கருவிழியின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக மாறி
4.விண்ணிலிருக்கும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை எளிதில் சுவாசிக்க முடியும்.
நீங்கள் விண்ணை நோக்கி எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று உங்கள் உடலுக்குள் அதைச் சேர்க்க முடியும்.
ஆகவே பிறர் தவறு செய்வதைப் பார்க்கும் பொழுது நமக்குள் அந்த வேதனையும் சோகமும் எரிச்சலும் கோபமும் இதைப் போல உணர்ச்சிகளைத் தூண்டி உடலைச் சோர்வடையச் செய்கின்றது.
பின் இது உடலுடன் இணைந்து விட்டால் அதனின் விளைவே அதிகமாகின்றது. அதனை விளைய விடாது தடுக்க வேண்டும் என்றால் இப்போது உபதேசித்த உணர்வின் தன்மை ஊழ் வினையாகப் பதிந்து கூர்ந்து அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தின் நிலைகளில் இருந்தால் இதுவே தியானம்.
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
2.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.அந்த மெய்ப்பொருள் காணும் திறன் நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் ஏக்கத்தில்
4.வலு கொண்டு நாம் அமர்ந்து இந்தத் தியானத்தைச் செய்தோம் என்றால் அதனின் பலனை நாம் அனுபவிக்கலாம்.
No comments:
Post a Comment